» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு
வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 25 பிரபலங்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி எம் பனீந்த்ரா சர்மா சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் மீது புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில் சமூக வலைதள பிரபலங்கள், நடிகர்கள் ஆகியோர் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதாகவும் அதற்கு ஈடாக பெரும் தொகையை இவர்கள் கமிஷனாக பெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய்தேவரகொண்டா, ப்ரணிதா, லட்சுமி மஞ்சு, நித்தி அகர்வால் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த செயலிகள் குறைந்த நேரத்தில் அதிக பணம் கிடைக்குமென்று முதலீடு செய்பவர்களை ஊக்குவித்து இறுதியில் அவர்களை சூதாட்டத்திற்கு அடிமையாக்குகின்றன. இதற்கான செயலிகள் ஆப் ஸ்டோர்களில் எளிதில் கிடைக்காது என்றாலும், சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் தங்களுக்குத் தேவையான பார்வையாளர்களை இலக்கு வைக்கின்றன.
ஆன்லைன் விளம்பரங்களின் பரவலான தன்மையால் இவை பயனர்களுக்கு எளிதாகக் கிடைப்பது இந்தச் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. இத்தகைய சூதாட்ட செயலிகளில் பல கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், தெலுங்கானா கேமிங் சட்டத்தின் பிரிவுகள் 3, 3(ஏ), மற்றும் 4; பிஎன்எஸ் இன் பிரிவு 49 உடன், பிரிவு 318(4) மற்றும் 112; ஐடி சட்டத்தின் பிரிவு 66-டி ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:33:13 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)
