» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மார்பகத்தை பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!
வியாழன் 20, மார்ச் 2025 5:02:36 PM (IST)
சிறுமியின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.
அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:33:13 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)
