» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: குஜராத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
புதன் 19, மார்ச் 2025 4:26:40 PM (IST)

இந்திய வம்சாவளி சாதனை பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரும் விண்வெளியில் இருந்து டிராகன் விண்கலத்தில் பத்திரமாக இன்று தரையிறங்கியதை தொடர்ந்து குஜராத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 4 நிலைகளை கடந்து பூமியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. பூமிக்கு திரும்பும் 4 நிலைகளில் முதல்நிலை விண்கலம் பூமிக்கு திரும்ப தயராவது. அதைத் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பின்னர் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது.
3-ம் நிலையில் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டது. பின்னர் 4-ம் நிலையான விண்வெளியில் இருந்து பூமியை வெற்றிகரமாக வந்தடைந்தது.இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்கள் இருந்த சுனிதா, வில்மோர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். விண்வெளியில் உணவு உற்பத்திக்கான லெட்யுஸ் கீரை செடி வளர்ப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ்.சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது. அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார்.
அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் நாசா அழைத்துக்கொண்டது. விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா. விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகளாக நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்துள்ளார்,
இவ்வாறாக 9 மாதங்களுக்கு பின்னர் பூமி திரும்பிய சாதனை பெண்மணி சுனிதா வில்லியம்ஸ். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக குஜராத் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:33:13 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)
