» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. இதற்கிடையில், இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடியுடம் தனது எக்ஸ் தளத்தில் இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது ' என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:33:13 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)
