» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கியது: 2 வெளிநாட்டு பெண்கள் கைது
திங்கள் 17, மார்ச் 2025 9:20:25 PM (IST)
கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் 2 வெளிநாட்டு பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அவர் ெகாடுத்த தகவலின்பேரில் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி நீலாத்ரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 வெளிநாட்டு பெண்களை கைது செய்தனர். அந்த வீட்டில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.275 கோடி மதிப்புள்ள 37.87 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் இவ்வளவு மதிப்புள்ள போதை பொருள் சிக்கி இருப்பதை கண்டுபோலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் மட்டுமின்றி 4 செல்போன்கள், ரூ.18 ஆயிரம் ரொக்கம், 2 டிராலி பேக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண்கள் தென் ஆப்பிரிக்கா அக்போவில்லே பகுதியை சேர்ந்த பம்பா பான்டா (31) மற்றும் தென் ஆப்பிரிக்கா பிரிட்டோரியாவை சேர்ந்த அபிகேல் அடோனிஸ் (30) என்பதும் தெரியவந்தது. பம்பா பான்டா தற்போது புதுடெல்லி விபின் கார்டனில் வசித்து வருகிறார். அதுபோல் அபிகேல் அடோனிஸ் புதுடெல்லி மால்வியா நகரில் வசித்து வருகிறார்.
ஒரே இடத்தில் 2 ேபரும் தங்கியிருந்தால் போலீசாரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக டெல்லியில் தனித்தனியாக வெவ்வேறு பகுதியில் தங்கி இருந்து போதை பொருள் கடத்தலை 1½ ஆண்டுகளாக நடத்தி வந்து இருக்கிறார்கள். குறிப்பாக கர்நாடக பெங்களூரு, மங்களூரு, டெல்லி உள்பட நாடு முழுவதும் போதை பொருள், போதை மாத்திரை விநியோகம் செய்து இருக்கிறார்கள்.
இது பற்றி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்கள் வைத்துள்ள பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவை குறித்து உண்மை தன்மை கண்டறியப்பட்டது. அப்போது விசா மற்றும் பாஸ்போர்ட் போலியானது என தெரிய வந்துள்ளது. பாம்பா பான்டா 2020-ம் ஆண்டு வணிக விசாவில் டெல்லிக்கு வந்து உணவு வண்டி தொழிலை நடத்தி வந்துள்ளார். 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ விசாவில் அபிகேல் அடோனிஸ் டெல்லிக்கு வந்து ஆடை வியாபாரம் செய்து வந்தார். கைதான 2 பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிக அளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அதிகாரிகளும் பெங்களூருக்கு வந்து கைதான 2 பெண்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
இது குறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், கடந்த ஆண்டு மங்களூரு பம்ப்வெல் பகுதியில் போதைப்பொருள் விற்றதாக ஹைதர் அலி மற்றும் பெங்களூருவில் நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் என்பவரை கைது செய்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை பறிமுதல் செய்ேதாம். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 2 வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்-யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 19, ஏப்ரல் 2025 11:53:39 AM (IST)

மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை : ராஜஸ்தானில் நோயாளிகள் அதிர்ச்சி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:53:13 PM (IST)

மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:38:39 PM (IST)

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக பதிலடி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:13:29 AM (IST)

மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி அமல் : பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:00:08 PM (IST)
_1744885386.jpg)