» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தானுடனான அமைதி முயற்சிக்கு துரோகமே பதிலாக கிடைத்தது: பிரதமர் மோடி
திங்கள் 17, மார்ச் 2025 12:14:58 PM (IST)
பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கும் துேராகமே பதிலாக கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறினார்.

2014-ம் ஆண்டு, எனது பதவியேற்பு விழாவுக்கு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அமைதியை ஏற்படுத்த நாங்கள் எடுத்த ஒவ்வொரு உன்னதமான முயற்சிக்கும் துரோகமும், பகையுமே பதிலாக கிடைத்தன. இருப்பினும், இருதரப்பு உறவை மேம்படுத்த வேண்டும் என்ற ஞானம், பாகிஸ்தான் தலைமைக்கு வரும் என்று நிச்சயமாக நம்புகிறோம்.
பாகிஸ்தான் மக்களும் கூட அமைதிக்காக ஏங்குகிறார்கள். ஏனென்றால், அப்பாவி குழந்தைகள் கூட கொல்லப்படுவதால், எந்நேரமும் பதற்றத்திலும், பயங்கரவாதத்திலும் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. இதற்கு முன்பு இல்லாதவகையில், நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். ‘சார்க்’ நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.
எனது வெளியுறவு கொள்கையை விமர்சித்தவர்கள் கூட அதைக்கண்டு வாயடைத்து போய்விட்டனர். அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அந்த வரலாற்றுசிறப்புமிக்க நல்லெண்ணத்தை தனது சுயசரிதையில் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். இவையெல்லாம் இந்தியா அமைதியை விரும்புவதற்கு ஆதாரங்கள். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், எனக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை நிலவுகிறது. இருவரும் ஒரே புள்ளியில் இணைந்துள்ளோம். அவர், ‘முதலில் அமெரிக்கா’ என்ற கொள்கை கொண்டவர். நான், ‘முதலில் இந்தியா’ என்ற கொள்கை கொண்டவன். நாங்கள் மற்ற எல்லாவற்றையும் விட தேசநலன்களை மேலாக கருதுபவர்கள். இதுதான் எங்களை இணைக்கிறது.
டிரம்ப், துணிச்சலானவர். சொந்தமாக முடிவுகளை எடுக்கிறார். அவரது நிர்வாகத்தில் இருப்பவர்களை சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். நல்ல திறமையான, வலிமையான குழுவை தேர்வு செய்துள்ளார். அவர்கள் டிரம்பின் கனவை நிறைவேற்றுவார்கள்.
டிரம்ப், தெளிவான செயல்திட்டம் வைத்துள்ளார். ஒவ்வொரு நடவடிக்கையும் அவரது இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். அமெரிக்காவுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். அவர் மீது துப்பாக்கி சூடு நடந்த பிறகுகூட அதை பார்க்க முடிகிறது. தனது 2-வது பதவிக்காலத்தில் முன்பை விட மிகவும் தயார்நிலையில் இருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் நான் மேடையில் உரையாற்றியபோது, அவர் கீழே பார்வையாளர்களுடன் அமர்ந்து கவனித்தார். அது அவரது எளிமையையும், நல்ல குணத்தையும் காட்டுகிறது.அந்த நிகழ்ச்சியில், அரங்கம் முழுவதும் சுற்றி வரலாம் என்று நான் கேட்டபோது, சிறிதும் தயக்கமின்றி, பாதுகாப்பு இல்லாமல் என்னுடன் சுற்றி வந்தார். மிகவும் வியப்பாக இருந்தது. அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்தம்பித்தன. இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் கலவரம் குறித்து
பேட்டியில், குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் நடந்தது. அதற்கு முன்பு, கோத்ரா ரெயில் நிலையத்தில் ரெயிலில் வந்தவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அச்சம்பவம் இருந்தது.
அதுதான், கலவரத்துக்கு நெருப்புப்பொறியாக மாறியது. கலவரம் தொடர்பாக பொய்யான கட்டுக்கதைகளை பரப்பினர். மத்தியில் ஆட்சியில் இருந்த எங்களது அரசியல் எதிரிகள், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், ஒருதடவைக்கு இரண்டு தடவை கவனமாக ஆய்வு செய்த கோர்ட்டு, நான் நிரபராதி என்று விடுவித்து விட்டது.
2002-ம் ஆண்டு கலவரம்தான், குஜராத்தில் நடந்த மிகப்பெரிய கலவரம் என்று தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு ஆண்டுதோறும் கலவரம் நடந்து வந்துள்ளது. 2002-க்கு பிறகுதான் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை திடீர் முடக்கம் : பயனாளர்கள் அவதி
சனி 12, ஏப்ரல் 2025 3:58:33 PM (IST)
