» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
ஞாயிறு 16, மார்ச் 2025 8:54:10 PM (IST)
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதில் மாணவர் முன்பு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, மாநிலத்தில் அமைதி, வளர்ச்சி, உற்சாகத்தை ஏற்படுத்துவதில் போடோ மாணவர் சங்கம் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. தில்லியில் உள்ள முக்கிய சாலைக்கு போடோ மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான போடோபா உபேந்திர நாத் பிரம்மா மார்க் என்று பெயரிட அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தில்லியில் உபேந்திர நாத் பிரம்மாவின் மார்பளவு சிலை திறக்கப்படும்.
போடோபா உபேந்திரநாத் பிரம்மாவின் ஒவ்வொரு கனவையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் நனவாக்கும். 2020 ஜனவரி 27 அன்று போடோலாந்து (அஸ்ஸாமில் அமைந்துள்ள சுய ஆட்சிப் பகுதி) பிராந்திய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதைக் கேலி செய்தன. ஆனால், இன்று மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் இந்த ஒப்பந்தத்தில் 82 சதவீதததை நிறைவேற்றியுள்ளன.
போடோலாந்தின் மக்கள் தொகை 3.5 மில்லியன் மட்டுமே என்றாலும், இதன் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடியை மத்திய அரசும் மாநில அரசும் ஒதுக்கியுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், போடோ மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சமூகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என அமித் ஷா பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 19, ஏப்ரல் 2025 11:53:39 AM (IST)

மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை : ராஜஸ்தானில் நோயாளிகள் அதிர்ச்சி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:53:13 PM (IST)

மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:38:39 PM (IST)

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக பதிலடி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:13:29 AM (IST)

மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி அமல் : பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:00:08 PM (IST)
_1744885386.jpg)