» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : மார்ச் 21-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
சனி 1, மார்ச் 2025 4:59:00 PM (IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலைஅறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு உச்சநீதிமன்ற கடந்த மாதம் (ஜனவரி) 27-ம்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் சிறப்பு நீதிமன்றம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்புடைய வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தியது.
அப்போது, சீலிட்ட உறையில் அளித்த அறிக்கையை நீதிபதிகள் பிரித்து படித்து பார்த்தனர். சீலிட்ட உறையில் அளிக்கப்பட்டுள்ள நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க பதிவாளருக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)

கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை திடீர் முடக்கம் : பயனாளர்கள் அவதி
சனி 12, ஏப்ரல் 2025 3:58:33 PM (IST)
