» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்துவேன்: மம்தா எச்சரிக்கை!

வியாழன் 27, பிப்ரவரி 2025 5:17:55 PM (IST)

"தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்" என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.

தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

2006 இல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது நான் 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ஒரு இயக்கத்தைத் தொடங்க முடியும். வாக்காளர் பட்டியலை சரிசெய்து போலி வாக்காளர்களை அகற்றக் கோருவதற்காக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் நான் ஈடுபடுவேன்.

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில், ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைப் பதிவு செய்து பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டால் மேற்கு வங்க தேர்தல்களில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக அறிந்திருப்பதால், அக்கட்சி ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைக் கொண்டு வந்து மேற்கு வங்க தேர்தல்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.

மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பிற மாநிலங்களில் இருந்து போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் அடையாளம் காண்போம். வெளியாட்கள் (பாஜக) மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பாஜக டெல்லி தேர்தலில் செய்ததை மேற்கு வங்கத்தில் செய்ய முடியாது.

அடுத்த ஆண்டு நடைபெற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 215 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே நமது இலக்கு. இதன்மூலம், பாஜகவின் வெற்றி வாய்ப்பை நாம் பெருமளவில் குறைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors



CSC Computer Education







Thoothukudi Business Directory