» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதலி உள்பட 5 பேரை சுத்தியலால் அடித்துக்கொன்ற வாலிபர்: திருவனந்தபுரத்தில் கொடூர சம்பவம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:24:58 PM (IST)



திருவனந்தபுரத்தில் காதலி உள்பட 5 பேரை சுத்தியலால் அடித்துக்கொன்ற வாலிபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை பகுதியை சேர்ந்தவர்அப்துல் ரஹீம். இவரது மனைவி ஷெமி. இவர்களது மகன்கள் அபான் (23), அப்சான் (13). அப்துல் ரஹீம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்துக்கு சென்ற அபான், தனது தாய், சகோதரன், காதலி, பாட்டி, மாமா, அத்தை ஆகிய 6 பேரையும் சுத்திய லால் கொடூரமாக தாக்கிய தாகவும், அதில் அவர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் கூறினார்.

இதையடுத்து போலீ சார் அபானின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது பேருமலையில் உள்ள அவரது வீட்டுக்குள் வெவ்வேறு அறைகளில் அவரது சகோதரர் அப்சான், காதலியான பர்சானா(22) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்னர். அவரது தாய் ஷெமி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை போலீசார் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பின்பு அபான் கூறியபடி அவரது வீட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்டி சல்மா பீவி வீட்டிற்கு சென்றனர். அங்கு தலையில் படுகாயத்துடன் கிடந்த சல்மா பீவியை அவரது மகள் ஆஸ்பத்திரிககு கொண்டு சென்ற தகவலை அறிந்தனர். கீழே தவறி விழுந்து சல்மா பீவி காயமடைந்ததாக அவரது மகள் நினைத் திருந்தார். ஆனால் அவரை சுத்தியலால் அடித்து கொன்றதாக வாலிபர் அபான் போலீசில் தெரி வித்ததையடுத்து, அவரை கொலை செய்த விவரம் தெரியவந்தது.

அதேபோல் அபான் கூறியபடி பேருமலையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தந்தை வழி மாமா அப்துல் லத்திப் வீட்டுக்கு போலீசார் சென்று பார்த்தனர். அங்கு அவரும், அவரது மனைவி சஜிதா பீவியும் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். வாலிபர் அபான் அவரது பாட்டி, சகோதரர், காதலி, மாமா, அத்தை உள்ளிட்ட 5 பேரையும் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைகள் நடந்த அனைத்து இடங்களுக்கு சென்று பார்த்த நேரத்தில் அபான் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டி ருந்தார். 

அப்போது அவர், தான் வைத்திருந்த எலி மருந்தை குடித்து விட்டார். இதையடுத்து அவர் சிகச்சைக்காக ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். வாலிபர் அபான் தனது பாட்டியைத் தான் முதலில் கொலை செய்துள்ளார். இதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து 25 கிலோமீட்டர் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார். பின்பு அவரை புதிதாக வாங்கிய சுத்தியலை பயன்படுத்தி தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார்.

பின்பு அங்கிருந்து மாமா அப்துல் லத்தீப் வீட்டிற்கு சென்று அவரையும், அத்தை சஜிதா பீவியையும் சுத்திய லால் அடித்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பிவந்த வாலிபர் அபான், அங்கிருந்த தனது காதலி பர்சானா, சகோதரர் அப்சான் ஆகியோ ரையும் சுத்தியலால் தாக்கி கொலை செய்திருக்கிறார்.

தாய் ஷெமியையும் சுத்தியலால் கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் மட்டும் உயிர் பிழைத் துள்ளார். ஆனால் அவரும் கவலைக்கிடமான நிலையி லேயே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அபான் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை யிலான 8 மணி நேரத்ததில் 25 கிலோமீட்டர் தொலை வுக்குள் இருந்த 3 வீடுகளுக்கு சென்று 5 கொலைகளையும் செய்திருக்கிறார். பின்பு ஒரு ஆட்டோவில் மாலை 6 மணிக்கு பிறகு காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். 

வாலிபர் அபான் சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கொலைகளுக்கான காரணம் பற்றிய எந்த தகவலையும் அவர் போலீசாரி டம் தெரிவிக்காமல் இருப்பதாக தெரிகிறது. அபானின் குடும்பம் நிதி பிரச்சினையால் கஷ்டப்பட்டு வந்துள்ளது. அவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்தபோதிலும் இவர்கள் கஷ்டப்பட்டுள்ளனர். 

இதனால் அபான் சில நாட்களுக்கு முன்பு தனது பாட்டியிடம் நகை களை கேட்டதாக தெரிகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அதுபற்றி அபானின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பாட்டியிடம் எப்படி நகை கேட்கலாம்? என்று அபானிடம் அனைவரும் கேட்டதாக தெரிகிறது. அந்த ஆத்திரத்தில் அவர் தன்னை கண்டித்த அனைவரையும் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education

New Shape Tailors





Thoothukudi Business Directory