» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
வியாழன் 30, ஜனவரி 2025 5:53:50 PM (IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகவும், அவரது பேச்சு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்தியதாகவும், உத்தர பிரதேச மாநிலம் ஹனுமான்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் மிஸ்ரா என்பவர் நிதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராக காரணத்தினால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் பிப்ரவரி 2024-ல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஜூலை 26-ந்தேதி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து 50 ரூபாய் உடன் இரண்டு பேர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், ராகுல் காந்தி சார்பில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா, தனக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என தெரிவித்து அதற்கான சான்றிதழும் வழங்கியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 11-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி வர்மா உத்தரவிட்டார். மிஸ்ரா சார்பில் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே ஆஜரானார். இது வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதி என ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது: பிரதமர் மோடி பேச்சு
சனி 22, பிப்ரவரி 2025 4:48:57 PM (IST)

டெல்லியில் பிரபல பெண் தாதா கைது: ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 5:12:12 PM (IST)

கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 4:39:59 PM (IST)

தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 12:40:00 PM (IST)

கார் விபத்து : சவுரவ் கங்குலி உயிர் தப்பினார்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:56:51 AM (IST)

ரயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: லோகோ பைலட் சங்கங்கள் கண்டனம்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)
