» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேசத்தந்தை மகாத்மா காந்தி 77வது நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
வியாழன் 30, ஜனவரி 2025 12:45:09 PM (IST)
டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், ஜனாதிபதி திரவுபதி முர்முவும் அஞ்சலி செலுத்தினர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, காந்தியின் நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை தூண்டுகின்றன. நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். மேலும், அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவுகூருகிறேன்." என தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது: பிரதமர் மோடி பேச்சு
சனி 22, பிப்ரவரி 2025 4:48:57 PM (IST)

டெல்லியில் பிரபல பெண் தாதா கைது: ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 5:12:12 PM (IST)

கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 4:39:59 PM (IST)

தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 12:40:00 PM (IST)

கார் விபத்து : சவுரவ் கங்குலி உயிர் தப்பினார்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:56:51 AM (IST)

ரயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: லோகோ பைலட் சங்கங்கள் கண்டனம்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)
