» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்
புதன் 29, ஜனவரி 2025 11:46:53 AM (IST)
பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுமாறு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/yogiaditiweer_1738132990.jpg)
அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார். மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளை செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் மக்கள் அமைதியாகக் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/earthquake_4_1739770466.jpg)
டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/trainbroke_1739681085.jpg)
கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/busaccidn_1739620193.jpg)
கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/modiindia_1739615943.jpg)
வாரணாசியில் 3வது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்
சனி 15, பிப்ரவரி 2025 4:07:56 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/bsnl4g_1739601837.jpg)
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன் முறையாக ரூ.262 கோடி லாபம் ஈட்டி சாதனை!
சனி 15, பிப்ரவரி 2025 12:15:07 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/jdeepa_1739535045.jpg)
ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:40:04 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/jiohotstar_1739527714.jpg)