» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தோ்வு குளறுபடிகள் : மறுதோ்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

செவ்வாய் 11, ஜூன் 2024 10:00:33 AM (IST)

நீட் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாா் சா்ச்சையானது. அதனைத் தொடா்ந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.

இந் நிலையில, நீட் தோ்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதோ்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹிதீன் ஆகியோா் தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில்,‘கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டன. 720-க்கு 718 அல்லது 719 மதிப்பெண்கள் பெறுவது முடியாத செயலாகும். கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. மாணவா்களுக்கு கருணை வழங்கப்பட்டது குறித்த பட்டியல் ஏதும் தனியாக வெளியிடப்படவில்லை.

தோ்வுக்கு முன்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களில் கருணை மதிப்பெண்கள் தொடா்பாக எவ்வித தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. தோ்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது. அதில் தவறாக குறிக்கப்பட்டிருந்த விடைகளை எதிா்த்து 13,000 தோ்வா்கள் முறையிட்டுள்ளனா்.

நுழைவுத் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவது அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்குதல் மற்றும் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யும் கோட்பாடுகளை வலுவிழக்கச் செய்வதாகும். இது கசிவான வினாத்தாள்களை பணம் கொடுத்து வாங்கும் சக்தியுடையவா்களுக்கு சாதகமாக அமைகிறது. அதேவேளையில் ஏழை எளிய மக்களுக்கான சம வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

முறைகேடுகள் மூலம் மருத்துவத் தோ்வுகளில் ஒருவா் வெற்றிபெற்றால் அவரால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும்’ என குறிப்பிடப்பட்டது. நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள உயா்நிலைக்குழுவை என்டிஏ அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு

செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory