» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடிநீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்: டெல்லி அரசு எச்சரிக்கை!

புதன் 29, மே 2024 5:26:42 PM (IST)

டெல்லியில் குடிநீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கார்களைக் குடிநீர் கொண்டு கழுவுதல், வீட்டுப் பயன்பாட்டிற்கான குடிநீரை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் நிரம்பி வழியும் நீர்த் தொட்டிகள் முதலான செயல்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஏனெனில் தேசிய தலைநகர் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க டெல்லி அரசு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லி பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, தண்ணீர் வீணாக்கப்படுவதைக் கண்காணிக்கவும் குறைக்கவும் 200 குழுக்களை அமைக்குமாறு, டெல்லி குடிநீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.அன்பரசுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தக் குழுக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று குடிநீர் வீணாவதைத் தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory