» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தாராவியில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பெரும் தீ விபத்து: 6 பேர் படுகாயம்!

செவ்வாய் 28, மே 2024 5:19:49 PM (IST)மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தாராவி பகுதியில் அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையில் காலா கைலா பகுதியில் அமைந்துள்ள அசோக் மில் காம்பவுண்டில் உள்ள ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலிருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த கோர தீ விபத்தில் கட்டடத்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory