» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேஜரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு இல்லை: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

செவ்வாய் 28, மே 2024 12:24:41 PM (IST)

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு இல்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

‘திடீரென குறைந்த உடல் எடை மற்றும் அதிக கீட்டோன் அளவுகள்‘ ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிஇடி-சிடி ஸ்கேன் உள்பட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தனது இடைக்கால ஜாமீனை ஏழு நாள்களுக்கு நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்தை உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு முடிவு செய்வார்கள் என்றும், இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடியும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரிய கேஜரிவாலின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கலால் கொள்கை ’ஊழலில்’ தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முதல்வா் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் 21 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ஏழு கட்ட தோ்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாள் கழித்து, ஜூன் 2 ஆம் தேதி கேஜரிவால் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory