» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்தது: பீகாரில் பரபரப்பு!
திங்கள் 27, மே 2024 5:13:47 PM (IST)
பீகாரில் ராகுல் காந்தி பங்கேற்ற பிரச்சார மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7ம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலை முன்னிட்டு, பீகார் மாநிலம், பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதிக்கு ஆதரவாக பாலிகஞ்ச் புறநகர்ப் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மிசா பாரதி, ராகுலின் கையைப் பிடித்து மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்து கீழே இறங்கியது.
இதில் ராகுல் காந்தி, மிசா பாரதி உள்ளிட்ட மேடையில் இருந்த தலைவர்கள் அனைவரும் சற்று தடுமாறினர். அதன் பிறகு அனைவரும் சுதாரித்து நின்றனர். எனினும் பாதுகாவலர்கள் அவர்களை நோக்கி விரைந்து ஓடிவந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.