» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளம் குழந்தைகள் பலி
ஞாயிறு 26, மே 2024 7:06:38 PM (IST)

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.
விபத்து குறித்து டெல்லி காவல் துறை தரப்பில் கூறும்போது: "இரவு 11.30 மணியளவில் எங்களுக்கு விவேக் விஹார் பகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்றபோது அருகிலிருந்த கட்டிடத்துக்கும் தீ பரவி இருந்தது. ஆனால், அதில் இருந்தோர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை தீ அணைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அடுல் கார்க், "தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மருத்துவமனைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் விபத்தில் வெடித்துச் சிதறி தீயை மேலும் தூண்டியது” என்றார்,
டெல்லி காவல் ஆணையர் ஷாதரா கூறுகையில், "மருத்துவமனையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க்ப்பட்டுள்ளது” என்றார்.முன்னதாக, நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்த சோகம் விலகுவதற்குள் டெல்லியில் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கச்சா எண்ணெய் விலை குறித்து தேவையற்ற கவலை வேண்டாம்: பெட்ரோலியத்துறை அமைச்சர்
வெள்ளி 20, ஜூன் 2025 12:06:15 PM (IST)

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும்: அமித்ஷா பேச்சு
வெள்ளி 20, ஜூன் 2025 10:24:48 AM (IST)

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு: பயணிகள் அதிர்ச்சி!!
வெள்ளி 20, ஜூன் 2025 10:19:11 AM (IST)

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸை தடுத்தால் வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 19, ஜூன் 2025 4:08:52 PM (IST)

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை: தமிழக அரசு
வியாழன் 19, ஜூன் 2025 12:18:01 PM (IST)

ஆமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
வியாழன் 19, ஜூன் 2025 11:30:43 AM (IST)
