» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிரேன் மீது ஆட்டோ மோதி கோர விபத்து: பெண்கள், குழந்தை உட்பட 7 பேர் பலி

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:17:57 PM (IST)

பீகாரில் கிரேன் மீது ஆட்டோ மோதிய கோர விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் கன்கர்பக் பகுதியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமான பணிக்காக கிரேன் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணிகள் இன்று காலை வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக வந்த ஆட்டோ நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory