» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர் பாரதி : அமித் ஷா புகழஞ்சலி!
திங்கள் 11, டிசம்பர் 2023 12:41:54 PM (IST)
தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர் மகாகவி பாரதியார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
ஒரு கவிஞரான மகாகவியின் படைப்புகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. தேசபக்தி அலையை மக்களிடம் தட்டி எழுப்பியவர். பாரதி அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியவர். அவரது வாழ்க்கை சரித்திரமும் அவரது செயல்களும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.