» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை: டி.ஆர். பாலு பேச்சு

திங்கள் 18, செப்டம்பர் 2023 3:57:38 PM (IST)

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று(செப். 18) தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப். 19) முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, '1962 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் எந்த சிறப்புகளும் இல்லை.  நாட்டில் கடும் நிதி நெருக்கடி இருக்கும் சூழ்நிலையில் அதிக செலவு செய்து புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான இறுதி கூட்டத்தொடரை இங்கு நடத்தலாமே? நல்ல நாள், நல்ல நேரத்தைவிட, மக்களுக்கு தேவையான நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும். 

75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஜனநாயகத்திற்கு புறம்பான சில மசோதாக்களை நிறைவேற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. காஷ்மீர், மணிப்பூர், தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்துக்கும் பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory