» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நேரத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்: டாஸ்க் விபரீதம்!!!

திங்கள் 18, செப்டம்பர் 2023 11:31:07 AM (IST)

கர்நாடகத்தில் டாஸ்க் என்ற பேரில், 14 மாணவிகள் தங்களது கைகளை பிளேடல் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் தண்டேலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர், தங்கள் கைகளை பிளேடால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. அந்த பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 14 பேர் ஒரே சமயத்தில் கைகளை பிளோடல் அறுத்துக் கொண்டனர். 

இதுகுறித்து அறிந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சே்ாத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், தண்டேலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுபற்றி போலீசார், சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது டாஸ்க் அடிப்படையிலான விளையாட்டு ஒன்றை அவர்கள் விளையாடியதும், அப்போது அதில் கூறப்பட்டதுபடி ஒரே நேரத்தில் 14 மாணவிகளும் தங்களது கைகளை பிளேடல் அறுத்துக் கொண்டதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory