» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாரம்பரியம், கலாசாரத்தை காங்கிரஸ் வெறுப்பது ஏன்?- அமித் ஷா கேள்வி!!

வெள்ளி 26, மே 2023 5:03:54 PM (IST)

இந்திய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று காங்கிரஸ் கூறியிருந்தது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் அவ்வாறு கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை நிராகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா இது தொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதமான சைவ மடம் சார்பில் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஒரு வாக்கிங் ஸ்டிக் என்று அருங்காட்சியகத்துக்கு காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்றும் கடுமையாக விமரிசித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory