» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆவினுக்கு போட்டியாக செயல்படவில்லை : அமுல் நிறுவனம் விளக்கம்!

வியாழன் 25, மே 2023 5:31:10 PM (IST)

"ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது" என அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்தநிலையில், அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.

ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் முறைந்த விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன.ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என பேச்சு நடத்தவில்லை.

கொள்முதல் விலையாக ஆவின் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் குறைந்தே விலைக்கே பால் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளின் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும், ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பால்மே 25, 2023 - 07:30:00 PM | Posted IP 162.1*****

கொடுக்கும் மாடுகள் தான் பாவம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory