» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பசுக்கள் கொல்லப்படுவதை நிறுத்தினால் பிரச்சனைகள் தீரும் - நீதிமன்றம் கருத்து!

திங்கள் 23, ஜனவரி 2023 10:17:00 AM (IST)

பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் பேரில் பல கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பசுவின் சாணத்தான வீடுகளை அணு கதிர்வீச்சால் பாதிக்காது என்பவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், பசுவின் கோமியம் தீராத நோய்களுக்கு மருந்தாகிறது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுவில் இருந்து மதம் பிறக்கிறது என கூறியுள்ள நீதிபதி பசுவை ஒரு விலங்காக பார்க்காமல் தாயாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பசுவின் ரத்தம் பூமியில் எப்பபோது படியாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்சனைகள் முடிவடையும் என்றும், பசு பாதுகாப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து

நான் இந்தியன்Jan 24, 2023 - 12:28:26 PM | Posted IP 162.1*****

உப்பிஸ் க்கள் நல்லா கதறுங்க .

பால்Jan 23, 2023 - 08:51:32 PM | Posted IP 162.1*****

குடிக்காம இருந்தா போதும்

ராமநாதபூபதிJan 23, 2023 - 03:44:21 PM | Posted IP 162.1*****

கவர்னர் பதவி வேணும்னா நேரடியா கேளுய்யா. அதை விட்டுட்டு மாட்டை மேய்ச்சிகிட்டு இருக்க

MauroofJan 23, 2023 - 11:36:58 AM | Posted IP 162.1*****

ஆஹா, என்ன ஒரு அறிவுப்பூர்வமான கருத்து மற்றும் தீர்ப்பு!... பாரத் பிதாகி ஜே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory