மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம் மற்றும் வர்த்தக வசதி குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஏற்படுத்துவது குறித்தும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் (APEDA) அமைப்பால் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும்,
புதிய மற்றும் ஏற்றுமதியாளராக விரும்பும் நபர்களுக்கு வழிகாட்ட விருப்பமுள்ள 2 மாவட்ட ஏற்றுமதி முன்னோடிகளை அடையாளம் காணுதல் குறித்தும், பொதுவான மீன் முன் பதப்படுத்தும் மையத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், முருங்கை மற்றும் பிற மதிப்புக்கூட்டு பொருட்களின் ஏற்றுமதி சாத்தியக் கூறுகள் குறித்தும்,
புதிய தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) பதிவுகளுக்கான அறிமுகத் திட்டங்கள் குறித்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களிடையே ஏற்றுமதி விழிப்புணர்வை உருவாக்குதல் குறித்தும், தரவு ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் (DEPC) தொடர்பான கூட்டங்களில் விவாதப் பொருட்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மையம் மண்டல பொது மேலாளர் சொர்ணலதா, உதவி ஆட்சியர் பயிற்சி பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வெளிநாட்டு வர்த்தக மேமபாட்டு அலுவலர் சிவஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

