திருநெல்வேலியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு நலதிட்ட பணிகள் நடைபெற்றன.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் முதியோருக்கு உணவு வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலக புகைப்பட தினமான இன்று காலை, நெல்லை மாவட்ட புகைப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கிச் சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் தானாக முன்வந்து ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து புகைப்படக் கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்பும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.