பணப்பரிமாற்றம், வங்கிக் கணக்கு, சைபர் மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கி மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன. வாட்ஸ்ஆப் வழியாக பல்வேறு அறிவுறுத்தல்களை மேற்கொண்டு வரும் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டிருக்கும் தகவலில் முக்கியமான ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
ஒவ்வொரு முறை டிஜிட்டல் பேமென்ட் செய்வதற்கு முன்பும், கீழே உள்ளவற்றை இரண்டு முறை சரிபார்க்கவும்:
நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் பெயர், அதாவது பயனாளியின் பெயர்
நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தொகை
அதாவது, ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது, விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
ஏனெனில், தவறான நபருக்கோ, தவறான தொகையையே அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனவே சரியாக மிக நிதானமாக இரண்டையும் சரிபார்த்துக் கொண்டு பணப்பரிமாற்றத்தை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறது. நாமும் இதனை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

