டிஎம்பி அறக்கட்டளை சார்பில் மதுரை இதயம் ராஜேந்திரன் பள்ளியில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்க ரூ. 11.80 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியில் 8 ஸ்மார்ட் போர்டுகள் அமைப்பதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வகுப்பறை கற்பித்தலில் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதுடன், மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், கற்றலில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கவும் நல்வாய்ப்பு ஏற்படும்.

இந்நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளையின் இயக்கத் தலைவர் மு. அனந்த சுப்பிரமணியன் மற்றும் துணைத் தலைவர் டி. இன்பமணி ஆகியோர் இதயம் ராஜேந்திரன் பள்ளித் தலைவர் இ. அருளரசுவிடம் ரூ. 11,80,000-க்கான காசோலையை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் மு. குமரேசன், பள்ளித் தாளாளர் டி. மகேஸ்வரன், இணை இயக்குநர் எம்.கே.என்.எஸ்.என்.ஆர். சிவனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.