தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அண்ணாமலையார் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை பாண்டியன் (61). காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சொந்தமாகத் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சூசை பாண்டியன், திடீரென விஷத்தைக் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். அவரைக் கண்ட உறவினர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சங்கரன்கோவில் டவுன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

