தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, ELTAI அமைப்பின் ‘இந்தியா வாசிப்பு இயக்கம்’ வாசகர் மன்றத்துடன் இணைந்து "புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்" என்ற தலைப்பில் சிறப்பு அறிமுக நிகழ்ச்சியை ஜூபிலி அரங்கில் நடத்தியது.

துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான பி. செரீனா மார்கரெட் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும், ELTAI தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான பி. ஜூலைஹா ஷகீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அருந்ததி ராயின் Mother Mary Comes to Me மற்றும் பானு முஷ்டாக்கின் Heart Lamp ஆகிய புத்தகங்களை மையமாகக் கொண்டு, இலக்கியப் படைப்புகளை எவ்வாறு அணுகுவது, திறனாய்வு செய்து விமர்சிப்பது மற்றும் மதிப்பீடு செய்வது போன்ற முறைகள் குறித்து அவர் விரிவாகக் விளக்கினார்.

இந்நிகழ்வை வி. டார்த்தி கேத்ரின், எம். ஹெர்மினா மற்றும் எம். மரியா ஆக்சிலியா ஜோசி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட சுமார் 210 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, புத்தக விமர்சனம் குறித்த கலந்துரையாடலில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கல்லூரிச் செயலாளர் எஸ். குழந்தை தெரஸ், முதல்வர் சி. ஷிபானா, துணை முதல்வர் எம். எஸ். எழிலரசி மற்றும் கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஏ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.