அஞ்சல் தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான அஞ்சல் தலை கண்காட்சி மற்றும் சேகரிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெறுகிறது.
மேலும், மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 13 (நிதி வலுவூட்டல் மற்றும் மக்களுக்கான சேவை தினம்): அஞ்சலக சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அக்டோபர் 14ம் தேதி அஞ்சலக கடித மற்றும் பார்சல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 15ம் தேதி அஞ்சல்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன டிஜிட்டல் சேவைகள் பொதுமக்களின் வசதிக்கேற்ப எவ்வாறு விரைவாக வழங்கப்படுகின்றன என்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டுத் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

