தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்பு மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாடு வரும் நவம்பர் 28-ஆம் தேதி தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற உள்ளது; இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வி.இ. ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இப்பயிற்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், மாநில மறுசீரமைப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனையொட்டி, மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மண்டல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தென்மண்டல காங்கிரஸ் மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவராமன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் க. பெருமாள்சாமி, தெற்கு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் லாரன்ஸ் ராபின்சன், நாகர்கோவில் மாநகரத் தலைவர் சிவபிரபு, மாவட்டப் பார்வையாளர்கள் முத்தழகன், பூவை ஜேம்ஸ், பஞ்சாட்சரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ், காங்கிரஸ் என்.ஜி.ஓ. மாநில ஒருங்கிணைப்பாளர் புல்லட் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, ராமநாதபுரம், கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு, நாகர்கோவில் மாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மண்டல் ஒருங்கிணைப்பாளர்கள் திரளாகப் பங்கேற்றனர். நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு தூத்துக்குடியில் நடைபெறுவதால் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.