சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை தாங்கி, முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பெத்துராஜ், ஜேம்ஸ் லாரன்ஸ், அனிதா, மாவட்டப் பொதுச்செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஞான திரவியம், தூத்துக்குடி ஒன்றியத் தலைவர் முருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் மண்டலத் தலைவர்கள் வசந்தகுமார், வேலு, முருகேசன், சித்ரபுத்திரன், காளிதாஸ், ஜெயமணி சுரேஷ், புதியம்புத்தூர் நகரத் தலைவர் துரைமணி, ஓட்டப்பிடாரம் 18-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் மொட்டைச்சாமி, மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து விஜயா, மாணவரணி பிரபு மற்றும் நிர்வாகிகள் நேரு, சண்முகம், தனசேகர், சுப்பையா, மனோஜ், கே. ராமசாமி, எஸ். ராமசாமி, முனியசாமி, பாலன், பாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

