தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த 5 இளைஞர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சங்கர் (20), சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கனிஅரசன் மகன் வெங்கடேஷ் (23), பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர்களான செந்தில் மகன் காளிதாஸ் (22), சிவக்குமார் மகன் முத்துமாதவன் (19) மற்றும் வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுடலை செல்வம் (20) ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.