தூத்துக்குடி சிவன் கோவில் தேரடியில் இயங்கி வரும் பிரபல பொதிகை ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், நிறுவனர் தின விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்துப் பொதிகை ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் வழக்கறிஞர் ஜோதி நெல்லைக்குமார் தெரிவித்ததாவது: "தூத்துக்குடியில் எங்கள் நிறுவனம் மிகுந்த தரத்துடன் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் கார வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.
எங்கள் நிறுவனத்தின் நிறுவனர் கலியுக வரதன் கருப்பசாமி எங்களுக்கு அளித்த தாரக மந்திரத்தின் அடிப்படையில் தரம், சுவை மற்றும் புதுமையுடன் பலகாரங்களை வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புளியங்குளம் தொழிலதிபர் மயில்வாகனனின் பிறந்தநாள் நிறுவனர் தின விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 3 மணி நேரத்திற்கு மட்டும் 50 சதவீதத் தள்ளுபடியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

