தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சித்ராங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின்படியும், பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன் வி.பால கணபதி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்களாக எஸ். காளிராஜா வி.எஸ். இசக்கிமுத்து, மாவட்டச் செயலாளராக எம்.செல்வி என்.சங்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

