நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 5 காவல் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
அன்படி தூத்துக்குடி தென்பாகம் ஆய்வாளர் திருமுருகன் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கும்,
சேக் அப்துல்காதர் தென்பாகம் குற்றப்பிரிவிலிருந்து சட்ட ஒழுங்கு காவல் நிலையத்திற்கு,
முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகாண்டீபன் தென்பாகம் குற்றப்பிரிவுக்கும்
புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,
அருள்ஜார்ஜ் சகாயசாந்தி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
இதேபோன்று, சொந்த விருப்பத்தின் பேரில் விண்ணப்பித்த 5 சப் இன்ஸ்பெக்டர்களை மண்டலம் விட்டு மண்டலம் இடமாற்றம் செய்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீவைகுண்டம் செந்தில்குமார், குரும்பூர் சண்முகராஜ், நாசரேத் முரளி ஆகியோர் சென்னைக்கும், தூத்துக்குடி வடபாகம் நிவேதா, தென்பாகம் சுப்புராஜ் ஆகியோர் கோவைக்கும் இடமாற்றம் செய்து கூடுதல் டி.ஜி.பி (சட்டம், ஒழுங்கு) மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டு உள்ளார். இந்த இடமாற்ற உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

