தூத்துக்குடி குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் ரூபா பங்கேற்று குத்துவிளக்கேற்றினார். கல்லூரி முதல்வர் இளங்குமரன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை நிர்வாகிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தலைவராக மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை மாணவர் மாரிலோகேஷ், துணைத் தலைவராக மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி அனுஸ்ரீ, செயலாளராக மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல்துறை மாணவர் சிவ மாதேஷ், இணைச் செயலாளராக மூன்றாமாண்டு வரலாற்றுத்துறை மாணவி பரலோக அஸ்மிதா, பொருளாளராக மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி விண்ணரசி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.