தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான பி. கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அரங்கில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாள் விழா வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநிலப் பொறியாளர் அணித் துணைச்செயலாளர் அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணக்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், ஆஸ்கர், சிவக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

