திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவிகளைப் பெற விரும்பும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பின்வரும் ஆவணங்களின் நகல்களுடன் (Xerox) நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்

குடும்ப அட்டை (Ration Card) நகல்

ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) நகல்