விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய திமுக எம்பி கனிமொழி, தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் வீட்டைத் திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டு, அவரது தாய்க்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது: சிறுமி காணாமல் போன வழக்கில் 34 நாட்கள் ஆன நிலையிலும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. உயர்நீதிமன்றத்தில் ஆணை உள்ள நிலையில், குழந்தை 'காணவில்லை' என்று பதிவு செய்யக்கூடாது; 'கடத்தல்' என்றுதான் பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைகள் மூலம் வாக்கு வாங்கிய விஜய், இது பற்றிப் பேசவில்லை. அவர் வரவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பொறுப்பு அமைச்சர்கூட இங்கு வரவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்து எத்தனை குழந்தைகள் காணாமல் போய் உள்ளார்கள்?
இதற்கு இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? இந்த ஆட்சியில் அலோங்கோலம் இருக்கிறது. தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

