தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துக் கொளத்துப்பாளையம் பேரூராட்சி, சாயப்பட்டறை மற்றும் நத்தக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது தி.மு.க. தலைவர் மற்றும் கட்சியின் சாதனை திட்டங்களை எடுத்துக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, பகுதி செயலாளர்கள் சிவகுமார், நிர்மல் ராஜ், கதிரேசன் மற்றும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.