தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுப்ரமணியபுரம் பகுதி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் இன்று (11.10.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் 150000 பனை விதைகள் நடுதல், பள்ளி மாணவ, மாணவிகள் 50,000 விதைப்பந்துகள் விதைத்தல், 2000 மரக்கன்றுகள் வழங்கும் பணி போன்ற திட்ட பணிகளை மாவட்ட வன அலுவலர் மு.இளையராஜா முன்னிலையில் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தாமிரபரணி நதிக்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சியாக கருதுகிறேன். குறிப்பாக தமிழ்நாடு அரசு பசுமை தமிழகம் என்ற திட்டத்தின் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.

மரக்கன்றுகள் நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். ஆகவே ஒரு இயக்கமாக செயல்படுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒரு மரம் நடுவதால் அடுத்த தலைமுறைக்கு நாம் ஏற்படுத்தும் வரப்பிரசாதம். மரம் நடுவது மட்டுமல்லாமல் அதனை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும். அனைவரும் மரம் நடுவோம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செயற்பொறியாளர் தாமிரபரணி வடிநில கோட்டம் கோரம்பள்ளம் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, சரஸ்வதி, தன்னார்வலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, கண்ணன், முருகசெல்வி, ஆனந்த செல்வன் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.