தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள பீமா அம்மாமாஹீன் அபூபக்கர் ஒலியுல்லா தைக்காவில் 85-வது ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழாவை முன்னிட்டு மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு கொடி ஊர்வலம் ஆரம்பித்தது. இந்த ஊர்வலம் பீமா தைக்காவில் இருந்து கிளம்பி சந்தை பக்கீர் மஸ்தான் சாகிப் ஒலியுல்லா தர்கா வந்து திரும்பியது.
இரவு 9 மணிக்கு அரண்மனைக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விளக்கு ராத்திரி நடைபெற்று துஆ ஓதப்பட்டது. மறுநாள் காலையில் தப்ரூக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது. விழாவில் அரக்கோணம் பீமா தர்கா அறங்காவலர் குழு முகம்மது ராபி ரஷிதி, சந்தை பக்கீர் மஸ்தான் தர்கா நிர்வாகி சேக் அசன்அலியார் சமதானி உள்படப் பலர் கலந்துகொண்டு அரண்மனைக் கொடியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மத நல்லிணக்கத்தினை முன்னிட்டு அனைத்துச் சமுதாய மக்களும் கௌரவிக்கப்பட்டனர். முகைதீன் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.
விழாவில் திமுக கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, திருவள்ளுவர் மாவட்ட ஜமால் முகைதீன் ஆமிரி, கயத்தாறு கமாலுதீன், பீமா தர்கா அறங்காவலர் அப்துல்காதர், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், விவசாய சங்கத் தலைவர் குமார் பாண்டியன், ஜமாத் துணைத் தலைவர் சிந்தா சேக் அப்பாஸ், வி. கோவில்பத்து ஆறுமுகநயினார், தவெகவைச் சேர்ந்த சபானா, முகம்மது ஹாலித், வெள்ளூர் சிவலிங்கம், கொங்கராயகுறிச்சி செல்வின் துரை, வீரளபேரி சீனிபாண்டியன் உள்படப் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பீமா தர்கா செயலாளர் கே.எஸ். புகாரி செய்திருந்தார்.

