தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகர் இந்திரா நகரைச் சேர்ந்த ரீத் மகன் ரீமஸ் (19), கிஷோர் (20), துரைசிங் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அஜய் (19) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், அவர்கள் விற்பனைக்காக 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் உடனடியாகக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 4 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

