தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கடமைச் சந்திப்பில், மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் வங்கித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சந்திப்பின் போது அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கிய உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர், தலைமைப் பொது மேலாளர் யாராசி ஜெயக்குமார் மற்றும் பல துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.