தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 45 பள்ளிகளைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தொடக்க விழாவிற்குத் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை வரவேற்றுப் பேசினார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் ரவீந்திரன் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உமாசங்கர், ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், செயலாளர் சூரிய நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு வாரியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளின் முடிவில் விஜயகரிசல்குளம் மகாத்மா காந்தி நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் கயத்தாறு மதர் தெரசா மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் அதிக புள்ளிகளைப் பெற்று இணைச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சாம்பியன் பட்டம் வென்ற பள்ளி அணிகளுக்கும் தொழிலதிபர்கள் திலகரத்தினம், செண்பகராஜ், நினைவுத் தொடக்கப்பள்ளி நிர்வாகி சிவகணேஷ் குமார், சதீஷ், ஆசிரியர் அந்தோணி ராஜ், டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். நிறைவாக டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி வேல்முருகன் நன்றி கூறினார்.