தூத்துக்குடியில் படமாக்கப்பட்ட ஜெயம் ரவியின் அகிலன் முதல்பார்வை போஸ்டர்!

பதிவு செய்த நாள் | சனி 12, பிப்ரவரி 2022 |
---|---|
நேரம் | 2:56:05 PM (IST) |
பூலோகம் பட இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் நடைபெறவுள்ள படப்பிடிப்புடன் ஷீட்டிங் நிறைவடைகிறது. இந்தப் படம் கப்பலில் பணி செய்யும் நபராக நடிக்கிறார். அகிலன் என்ற தலைப்புடன் இந்திய கடல்களின் அரசன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.